பாலின் சரிதை (Life of milk)
பால்காரன் மருத்துவச்சியாக ஆககோமாதாவின் புதிரியானவள்
இப்புவியினில் தோன்றினால்
பிறந்த சில நாழிகையிலேயே
பால் மனம் மாறாத பருவத்திலேயே
பால விவாஹம் செய்யப் பட்டது
நீரானவன் உடையவன் ஆனான்
இளம் வயதில் திருமணம் என்பது
வேதனை - அதனினும் வேதனை
இங்கு நடந்தேறியது
கணவனை இழந்தவள்
நெருப்பில் உயிரை மாய்த்துக் கொள்வது
பழங்காலச் சடங்கு
எதிர்மாறாக நெருப்பின் வெப்பத்தினால்
தனது உடையவனை இவள் இழக்க
மிளிரும் அழகு உடைகளை கலைக்க
விதவை கோலம் பூண்டு
வெண்ணிற பால் ஆடையாக புடவையை போர்த்தினால்
இத்தரணியில் தனது தோன்றலை பற்றி சிந்தித்தால்
தொன்றாமையே நன்று என்று முடிவுற்றால்
அப்பபோது பூகம்பத்தில் கண்ட புதையலை போல
அவளது வாழ்வை
குஜால்டி ஆக்க வந்ததோர் கிருமி
முரட்டுப் பயல் மக்களை மிரட்டும் ஆண்மகன்
மிரண்டு போன அவ்விளம் விதவைக்கு வாழ்வளித்தான்
கொழு கொழு வென்று
அழகு பெண் குழந்தை பிறந்தது
அதற்கு தயிர் என்று பெயர் இட்டனர்
பின்பு வெண்ணை நெய் என்ற
பேரன் பேத்தியையும் பெற்றடுத்தனர்
இருவரும் இறுதி வரை இனிதே வாழ்ந்தனர்
No comments:
Post a Comment